Monday, December 26, 2011

கொலைவெறி பாடல்


இப்பொழுது கொலைவெறி பாடல் தமிழர்களிடம் மட்டும் இன்றி ...உலகளவில் பிரபலம் ஆகிவிட்டது.....அப் பாடலை பலரும் பலவிதங்களில் ரீமிக்ஸ் ய்து பாடி உள்ளார்கள் ....இந்து கல்லூரி  மாணவன் த .மதீசன் அவர்களால்  ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல் ........

Saturday, November 26, 2011

யாழ்ப்பாணம் - படப்பிடிப்பு தளத்திலிருந்து...

ஈழத்தில் உருவாகும் திரைத்துறை சம்பந்தமான எந்த விடயத்திற்கும் ஒரு நல்ல எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும். காரணம் அங்கே உள்ள சூழல் பின்னணி, தேர்ந்தெடுக்கப்படும் கதை என பல சொல்லப்பட்டாலும் மிக முக்கியமாக அங்குள்ள தமிழும் பேச்சு வழக்குமே முக்கியமானதாகும்.

யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமான முறையில் காட்சியமைப்புளோடு உருவாகி வரும் குறும்படம் “யாழ்ப்பாணம்“. ஒரு குறும்படம் என்பதை தாண்டி நவீன தொழிநுட்ப முறையில் இலங்கையில் சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தின் முக்கியமான பிரபல்யமான இடங்களில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Evergreenbuzz என்ற நிறுவனத்தினர் தயாரிக்க கிருத்தினது இயக்கத்தில் மதிசுதா பிரசன்னா ஜெயகோபி விந்தகன் கிருத்திகன் முகுந்தன் நந்தசிறீ வாகீசன் சஞ்சீவன் வேணுதனுசன் பிரசாத் ஆகியோரது அயராத உழைப்பில் தயாராகிவருவதாகவும் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு ஏற்றதாகவே படம் அமையும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


ஆரம்பிக்கும் போது மிகவும் தொலைவிலுள்ள இலக்காக தென்பட்ட விடையம் இன்று மிக அருகில் கைகூடியுள்ளது.
ஏற்கனவே குறும்படங்கள் தயாரிப்பது பற்றி இலங்கை பதிவகள் ஆலோசித்து வைத்த விடையம் பின்னர் பலர் கலந்தாலோசனை செய்த போது எனக்கும் இது பற்றிய ஆவலை தூண்டியது...! பதிவுலகிலிருந்த பல நண்பர்களும் உற்சாகமூட்ட ஸ்ரார்ட் மீசிக்


இப்போ கதை வேணுமே...!
யாழ்ப்பாணத்திலிருக்கும் பதிவர்கள் எப்போது சந்தித்தாலும் யாழ்ப்பாணத்தை பற்றி கதைப்பது வழக்கம். அதையே கதையின் கருப்பொருளாக வைத்தோம்.

லொகேஷன்...!
பதிவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடங்களான நல்லூர் பொது நூலகம் பஸ்ஸராண்ட் என்பனவற்றோடு ஒருமுறை சுபாங்கன் அண்ணாவோடு யாழ்ப்பாணத்தை சுற்றிவந்து போட்டோ எடுத்தபோது இதையெல்லாம் வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்றார். அவரோடு சென்ற சங்கிலியன் சிலை, மந்திரி மனை போன்ற பல இடங்களையும் தெரிவு செய்தோம்.

கதாநாயகன்
ஆறுமுதல் அறுவது வரை ஆறரைகோடி விசிறிகள் கொண்ட கறுப்பு  சூப்பர்ஸ்ராரை போல- நமக்கும் ஒரு சூப்பர்ஹீரோவாக மதிசுதா ஒரு கிழிந்த சட்டையுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இறங்கினார்(காரக்டராவே மாறுவது என்பது இதுதான்).
இவரோடு பிரசன்னா என்ற மருத்துவதுறையை சார்ந்த ஒருவரும் உள்ளார்.

முதல்நாள் படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் வைத்து மற்ற நடிகர்களுக்கு ஷ்கிரிப்டை கொடுத்து அவரவர் டயலாக்களை சொல்லி கொடுத்த பின் லொகேஷனுக்கு செல்ல சொல்லிவி்ட்டு நாம் அன்றய படப்பிடிப்பு இடமான கசூரினா பீச்க்கு போய்விட்டோம். ஆனால் மற்றவர்களை காணோம் ஒவ்வொருவராக அழைப்பு எடுத்தால் தாம் ஸ்பொட்'ல தான் நிக்கிறோம் என்றனர். சில நிமிட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் லெகேஷன் என நினைத்து சிலர் பஸ்ஸான்டுக்கும் சிலர் சங்கிலியன் சிலையடியிலும் போய் அங்குள்ளவர்களுக்கு இப்ப இங்க சூட்டிங் நடக்க போகுது என்று பீதியை கிளப்பி வி்டார்கள்.

(இந்த படத்தில் வேணுதனுசன் கிருத்திகன் உட்பட படத்தில் பணியாற்றிய சிலர்

இப்படத்தி்ன் ஒளிப்பதிவாளராக கடமையாற்றியதில் பெருமையடைகி்றேன்...
படப்பிடிப்பு நேரத்தில் கடும் மழை பொழிந்தபோது இயற்கை மழையிலும் காடசிகளை படமாக்கினோம். என்னோடு ஒளிப்பதிவு உதவியாளராக இருந்தவர்கள் கடும் மழையிலும் கிரேன் அசைத்து உதவினார்கள்.

100 அடிக்கு மேலே ஏறி வீடியோ எடுக்க சொன்ன போது ஆர்வமாக ஏறினேன் அங்கிருந்து கீழே பார்த்தபோது உடல் நடுக்கம் கண்டது..! கமரா ஒன் செய்ததும் கீழே நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஏதும் சொல்லாமலே கிரேன் நகர ஆரம்பித்து வி்ட்டது. அங்கிருந்து பார்த்தபோது பஸ்களே தீப்பெட்டி சைசிலிருந்தது..!! zoom லொன்ஸ் பாவித்து long shot படமாக்கினோம்.

பஸ்ரான்ட் படப்பிடிப்பு
தீபாவளி சனக்கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருந்தாலும் சன நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தையே தெரிவு செய்தோம். கமரா ரோல் ஆகிகொண்டிருக்கும் போது கமராவுக்கு குறுக்கே யாரும் வந்து விடாமல் எம்மோடு இருந்தவர்கள் நாலா பக்கமும் நின்று பார்த்துக்கொண்டாலும் பல ரீ டேக்குகள் எடுக்கவேண்டியானது. ஒரு பழக்கடையில் உசிரை குடுத்து நடித்துக்கொண்டிருந்த மதிசுதாவிடம் பலர் பொருள் விலை கேட்க சிறிது நேரம் ஒரு துறைசார் வல்லுனர் போல் பழ வியாபாரி ஆகி நடத்திக்கொடுத்தார்.

அங்கிருந்த சிலர் தம்மையும் படத்தில் எங்காவது இணைத்து கொள்ளுமாறு கேட்டனர். சிலர் திட்டு வாங்கினாலும் குறுக்கே நடந்து தம் முகத்தை கமராவுக்கு காட்டிய படி வரலாற்று சாதனை புரிந்தார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9மணியளவில் பருத்திதுறையிலிருந்து டப்பிங்குக்காக வந்து கொண்டிருந்தார் மதிசுதா அன்று விஜய் படம் ரிலீசாகி அவருக்க்காக ப்ஸ் நிலையத்துக்கருகில் நின்றிருந்த படக்குழுவினர் அனைவரும் 500/= டிக்கட்டை ஒரு நல்ல உள்ளம் ஓசியில் எடுத்து தந்ததால் தியேட்ருக்குள் சென்று விட்டோம்.  மதிசுதா பஸ் நிலையம் வந்தும் திரையரங்குக்கு வராமல் சென்று இடையில் மழை குறுக்கிட்டதால் வீதியில் ஓய்வெடுத்து காலை 5மணியளவிலே வீடு சென்றார். அவருக்காக எடுத்த டிக்கட்டை 1000ரூபாக்கு ஒரு உயிர் ரசிகருக்கு ப்ளாக்கில் விற்று இன்னுமொரு சாதனை நிலைநாட்டினோம் அன்று மதிசுதா என்ற புன்னகை மனிதருள்குள் இருந்த காலசுவடுகளின் வைராக்கியத்தை கண்டு வியந்து போனேன்.

இந்த குறும்படத்தின் முகப்புத்தக பக்கம் இது http://www.facebook.com/யாழ்ப்பாணம் இங்கே ஏனய புகைப்படங்கள் செய்திகள்எதிர்(பார்)ப்புகள் பகிரப்பட்டுள்ளது.

எம் படம் பற்றி செய்திகள் பகிர்ந்த ஊடகங்களுக்கு படத்தில் மட்டுமல்ல எம் தனிப்பட்ட நன்றிகளும் கூட..!

இப்போது Sound edit டப்பிங் வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்களில் வெளியிட தயாரக உள்ளோம். உற்சாகமூட்டிய அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகள்.


ஈழத்துச் சினிமா எனும் சொல்லுக்கான தேடலிற்கு இன்றைய கால கட்டத்தில் உள்ள எம் படைப்புக்கள் வாயிலாக விடை காண முடியாது நிற்கின்றோம். காரணம் இன்றைய கால கட்டத்தில் ஈழத்துச் சினிமாவில் முழு நீளத் திரைப்படங்கள் அதிகளவில் வெளியாகுவதில்லை. அத்தோடு ஈழத்தில் நிலவும் வளப் பற்றாக் குறை என்ற ஒன்றினைக் காரணங் காட்டி யாருமே படம் எடுக்க விரும்புவதுமில்லை. குறும்படங்கள் மாத்திரமே அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு நாள் வந்து கொள்கின்றது. ஆகவே நீண்ட காலத்தின் பின்னர் யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு சிறு முயற்சியாக வெளிவரவிருக்கும் இக் குறும்படக் குழுவினரை வாழ்த்தி, வரவேற்பது நம் கடமையல்லவா?


அடுத்துள்ளது படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சில சீரியஸ்ஸான சீக்கின்ஸ்...!


Wednesday, November 23, 2011

3 படத்தில் கலக்கும் தனுஷ்


ஐஸ்வர்யா தனுஷ் இன் இயக்கதில் தனுஷ் ஸ்ருதிஹசன் நடிக்கும் படம் "3 " இந்த படத்தின் "WHY THIS KOLAI VERI"என்னும்  ஒரு பாடல் அண்மையில்         வெளிஜிடப்பட்டது .




Sung By Dhanush
Music By Anirudh


yo boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
rhythm correct
why this kolaveri kolaveri kolaveri di
maintain this
why this kolaveri..di

distance la moon-u moon-u 
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin-u girl-u girl-u
girl-u heart-u black-u
eyes-u eyes-u meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila sax eduthuko
pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
sariya vaasi
super maama ready
ready 1 2 3 4

whaa wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
eyes-u full-aa tear-u
empty life-u
girl-u come-u
life reverse gear-u
lovvu lovvu 
oh my lovvu
you showed me bouv-u
cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

this song for soup boys-u
we dont have choice-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song

---------------

Almost everyone can understand this song..
anyway here are the meaning for few words

Kolaveri - Killer rage or Murderous Rage.
"Soup Song" - Love failure Song
"Soup Boys" - Boys who failed in love