Monday, August 8, 2011

Samsung Galaxy Tab 10.1


சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy Tab 10.1 எனும் டேப்லெட் PC ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 உடன் போட்டி போடும் வகையில், இந்த டேப்லெட் அமைந்துள்ளது. ஐபேட்-2விற்கு போட்டி வந்துவிட்டது என்று கூறுவது கூட ஒரு வகையில் தகும். அதற்கான அம்சங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த டேப்லெட் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 வை விட தடிமண் குறைவாக உள்ளது. மேலும் இதன் டிஸ்‌ப்லே திரையும் ஐபேட்-2 வை விட அகலமாக உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டுள்ளது. இதன் எடையும் ஐபேட்-2 வை விட குறைவாக உள்ளவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கையால்வதற்கு மிக எளிமையாக உள்ளது.
galaxy-tab-10.1-slimஇப்பொழுது உங்களுக்கு புரியும் ஏன் இதனை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-2 விற்கு சரியான போட்டி என்று கூறுவது.
இந்த டேப்லெட் முழுமையாக தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இதன் Screen Resolution 1280 x 800 ஆகும். மற்றும் 10.1 இன்ச் டிஸ்‌ப்லே திரை மிக தெளிவான வண்ணமயமான காட்சிகளை நமது கண்முன் காட்டுகிறது. நீங்கள் இதை உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் போது, உங்களை சுற்றி கிட்டதட்ட எட்டு நண்பர்கள் பார்த்தாலும் உங்களின் செயல்பாடுகளை மிக தெளிவாக பார்க்கமுடியும். இதன் தொடுதிரை செயல்பாடு மிக அருமையாக உள்ளது. உங்களின் கை விரல்கள் தொடும் செயல்பாடுகளுக்கு ஏற்ப திறம்பட செயலாற்றுக்கிறது.galaxy-tab-10.1இதில் வீடியோகால் வசதிக்காக முன்பக்கம் 2 MP கேமராவும், பின்பக்கம் 3 MP கேமராவும் தரப்பட்டுள்ளது. LED FlashLight உள்ளது. இந்த கேமராவின் மூலம் 720pலில் வீடியோ ஒளிப்பதிவு செய்யமுடியும்.
இதில் இரண்டு சிறிய ஒலிபெருக்கிகள் இரு முனைகளில் உள்ளன. இதன் ஒலித்திறன் கேட்பதற்கு மிக தெளிவாக உள்ளது. 3.5mm Headjack கொடுக்கப்பட்டுள்ளது. Wi-Fi, Bluetooth, USB data connectivity வசதிகளும் உள்ளன.galaxy-tab-10.1-music
இந்த Android டேப்லெட் Android3.0 Honeycomb ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இதன் பிராசாசர் 1 Ghz Dual Core Processor ஆகும்.எனவே இது வேகமாக திறம்பட செயல்புரிகிறது. ஆன் செய்த 20 நொடிகளில் பூட் ஆகிறது.
இதன் மின்கலத்திறன் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. கிட்டதட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து உழைக்கிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் ஆகும்.
galaxy-tab-10.1-apps
வழக்கமன் மென்பொருள்கள் விடுத்து இதில் QuickOffice HD, Amazon MP3, Amazon Kindle for Android, Movie Studio, Music Hub (a bit pointless given the introduction of Music Beta), Pulse (a feed reader / news gatherer with a rather impressive design layout),Android Market, Android Browser/UI, Google Mobile Service, Gtalk Video Chat, Google Maps போன்ற உபயோகமுள்ள மென்பொருள்கள் பல உள்ளன.
இதன் Gmail அப்ளிகேசன் சிறப்பாக செயலாற்றும் வண்ணம் உள்ளது. Gmail ஐ அதிகமாக உபயோகிக்கும் நபர்களுக்கு இது ஒரு வரம் என்றே கூறலாம்.
galaxy-tab-10.1-gmail

No comments:

Post a Comment