Friday, September 30, 2011

வளையும் தன்மை கொண்ட பேனல் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்!

ஸ்கின் என்ற பெயரில் புதிய மொபைலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். கிராபின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல்போனின் பேனல் வளைந்து, நெளியும் தன்மை கொண்டது. கீழே விழுந்தாலும் உடையாது.

எதிர்கால தொழில்நுட்ப வசதிகொண்ட மொபைலாக சாம்சங் இந்த போனை சந்தையில் விரைவில் களமிறக்க உள்ளது. இந்த மொபைலின் எல்சிடி திரையும் வளைந்து நெளியும் என்பது கூடுதல் சிறப்பு.

இது 800 X 400 பிக்ஸல் ரிசல்யுஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் அமோல்டு தொழில் நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் வசதி கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 1.2 ஜிஎச்இசட் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வசதி கொண்டது.

இன்றைய இந்திய சந்தையில் அமோல்டு திரை மற்றும் எல்சிடி வசதி கொண்ட மொபைல்கள் அதிக வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. இதனால் இந்த மொபைலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Samsung Galaxy Skin

No comments:

Post a Comment